சம்பந்தர் சொல்றார் நாங்கள் என்ன செய்வது.. சித்தார்தனின் ஆதங்கம்.
வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பிபிசி வானொலியின் தமிழ் சேவைக்கு வழங்கிய செவ்வியில் ...
வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாகவும், தாமும் அதனையே ஆதரிப்பதாகவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.
ஆனாலும் சுமூகமான ஆரம்பத்தை நோக்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்க வேண்டும் என்று சர்வதேச சமூகமும் ஏனைய பலரும் கேட்டிருப்பதாக இரா. சம்பந்தன் அவர்கள் கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தை மக்கள் உணர்வுபூர்வமாகப் பார்ப்பதால், கட்சிகளும் அதனையே பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தாங்கள் சிங்கள அரசிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்ற கருத்து மக்கள் மனதில் ஏற்பட்டுவிடும் என்பதுதான் தமது கவலை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவை குறித்த அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இந்த இணைப்பில் அழுத்தி கேட்கலாம்.
நன்றி பிபிசி
2 comments :
Did, he have any proof, where he saying that Northen tamils have selcted TNA, becouse - thay are against for Sri Lankan Govenment???
What kind of proof TNA or Sitharthan have? where tamils says that - thay have choosed TNA, becouse of thay are against to Sri Lankan government!
Those all thinks,fals informations by TNA politiciens! There are so many frauds like Sri tharan.
How came 20-25% for goverment party in north??
புளொட் அமைப்பு துணை இராணுவ அமைப்பு அல்ல என அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட்டின் வெளியுறவு குழுவின் முன் 2009ம் ஆண்டு மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆய்வாளர் ஹெனா நொய்ஸ்ஹார்ட் தாக்கல் செய்த அறிக்கையொன்றில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் துணை இராணுவ குழுவினர் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வவுனியாவில் தங்கியுள்ள முகாம் ஒன்றில் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சித்தார்த்தன் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆய்வாளருக்கு ஹெனா நொய்ஸ்ஹார்ட்டுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையை படித்த தான் ஆச்சரியமடைந்தாக சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு பயந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் அடைக்கலம் தேடியுள்ள மாணிக்கதாசனின் கொலைச் சூத்திரதாரி சித்தாதத்தன்
மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பது என புளொட் அமைப்பு முடிவு - 2009ல் சித்தாத்தன்.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாம் ஆதரவை வழங்க முன்வந்துள்ளோம். இவ்வாறு புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் புளொட் அலுவலகத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகைளைச் சேர்ந்த இருவரும் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தைத் தரப்போவதில்லை. இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவின் சில முன்மாதிரியான நடவடிக்கைகளை வைத்துப்பார்க்கும் போது சில காரியங்களை அவர் செய்வார் என நம்புகிறோம். இதனால்தான் மஹிந்த ராஜ பக்ஷவுக்கு ஆதரவை வழங்க நாம் தீர்மானித்தோம். எமது இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டமையாலும்இ தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் ஜனாதிபதி கவனமெடுத்து வருவதாலும் மஹிந்தவை நாம் ஆதரிக் கின்றோம். அனைவருடனும் இணைந்து செயல்பட நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இணையத் தயாராக இல்லை. அந்த அமைப்பை வேறு ஒரு பெயரில் புதிதாக உருவாக்கி அந்த அமைப்பின் கீழ் ஒன்று பட்டுச் செயற்பட நாம் தயாராக இருக்கிறோம்.
ஆனால் 2013ல் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இணையத் தயாராக இல்லை என்று கூறிய சித்தாதன் அதில் சேந்து இருந்து வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும்இ வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால்இ ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாகவும்இ தாமும் அதனையே ஆதரிப்பதாகவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.
Post a Comment