தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவினைக்கு காரணம்
வெள்ளமுள்ளிவாய்க்காலில் சத்திய பிரமாணம் செய்ய முற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் வெள்ளமுள்ளிவாய்க்காலை மறந்து முதல மைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியபிர மாணம் செய்துள்ளனர்.
வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களின் சத்தியபிரமாண நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் சி,வீ.விக் னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வை புறக்கணித்த 9 மாகாண சபை உறுப்பினர்கள் வெள்ள முள்ளிவாய்க்காலில் சத்தியபிரமாணம் செய்ய போவதாக ஏற்கனவே அறிவித்திரு ந்தனர்.
எனினும் அந்த தீர்மானத்தை மாற்றி கொண்ட வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.கே.சிவாஜிலிங்கம் மாத்திரம் இத்தீர்மானத்திற்கு எதிராக நின்று வெள்ளமுள்ளிவாய்க்காலுக்கு சென்று வைத்தியர் ஒருவர் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துள்ளார்.
எது எவ்வாறிருப்பினும் மாகாண சபை தேர்தலை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பல கூறுகளாக சிதறுண்டு போகும் அறிகுறிகள் தென்படுகின்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் போர் கொடி தூக்கியுள்ளதை வடபகுதி செய்திகள் உறுதிபடுத்தி யுள்ளன.
திரு விக்னேஸ்வரன் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து வடமாகாண சபையை கொண்டு நடத்த தீர்மானித்துள்ளார். தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த பிரிவினைக்கு காரணம் என வடபகுதி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல கட்சி தலைவர்கள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை நோக்காக கொண்டு மாகாண சபையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்நோக்கங்களை நிறைவேற்றி கொள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இடமளிக்க மாட்டார் என்பதை புரிந்து கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் விக்னேஸ்வரனுக்கு எதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் வடபகுதி செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment