பொதுநலவாய விழிப்புணர்வு பேரணியை வேடிக்கை பார்த்த வவுனியா மக்கள்
பொதுநலவாய மாநாட்டையொட்டி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வாகனப் பேரணி நேற்று வவுனியாவை வந்தடைந்தது. மோட்டர் சைக்கிள், வாகனங்கள் என்பன பொதுநலவாய நாடுகளினதும் இலங்கையினதும் கொடிகளை தாங்கியவாறு ஊர்வலமாக வந்தது.
இதன் போது, வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்னால் வைத்து வவுனியா அரசாங்க அதிபர் பந்துலஹரிச்சந்திர, ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிசோர், வவுனியா மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சுமதிபால, உள்ளிட்டவர்களின் தலைமையிலான அரச குழுவினர் ஊர்வலத்தை வரவேற்று அதனுடன் இணைந்து நகரின் பிரதான வீதியில் ஊர்வலமாக சென்றனர்.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி சாவகச்சேரி, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை, மாங்குளம், ஆகிய இடங்களுக்கு சென்று இன்றைய தினம் வவுனியாவை வந்தடைந்ததுடன் தொடர்ந்து காலி முகத்திடல் நோக்கி செல்கின்றது. வவுனியா மக்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தனர்.
இதன் மூலம் பொதுநலவாய மாநாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
0 comments :
Post a Comment