காணாமல் போனோர் கணக்கெடுப்பு! ஐ.நா மனித உரிமை அமர்வுக்கு முன்னர் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை!
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அமர்வுக்கு முன் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைங்களின் படி நட்டஈடு வழங்குவதற்காக யுத்தகாலத்தில் ஏற்பட்ட மரணங்கள், காணாமல் போனவர்கள் மற்றும் ஆட்களுக்கும் சொத்துகளுக்கும் உண்டான சேதங்கள் தொடர்பாக ஒரு விசேட கணக்கெடுப்பை அரசாங்கம் நடத்தவுள்ளது.
இந்த கணக்கெடுப்பு நவம்பர் 30 தொடக்கம் டிசெம்பர் 10 வரை நடைபெறும். அரசாங்கம் இந்த கணக்கெடுப்பை நடத்தவுள்ளது.
இந்த விசேட கணக்கெடுப்பு 1983 ல் இருந்து மே 2009 ல் யுத்தம் முடிந்தது வரையான காலத்தை அடக்கியதாகும். இந்த கணக்கெடுப்பு நவம்பர் 30 தொடக்கம் திசெம்பர் 10 வரை நடைபெறும்.
வீட்டுக்கு வரும் கிராம சேவை அலுவலருக்கு துல்லியமான தகவலை வழங்குவதன் மூலம் பொதுமக்கள் இக் கணக்கெடுப்புக்கு உதவ வேண்டுமெனவும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
0 comments :
Post a Comment