கொழும்பு-கட்டுநாயக கடுகதி வீதியில் நடை பயணத்தை மேற்கொண்டார் ஜனாதிபதி மகிந்த!
கொழும்பு-கட்டுநாயக கடுகதி வீதியின் ஆச்சரியத்தை அவ தானிப்பதற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விஜ யம் செய்தார். இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டா வது அதிவேக பாதையான கொழும்பு-கட்டுநாயக அதிவேக பாதையை திறப்பதற்கு முன்னர், பொது மக்கள் பார்வை யிடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப் பட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களாக மக்கள், அலை அலையாக இவ்வீதியை பார்வையிட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான இன்று காலை இப்பாதைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இப்பாதையில் நடந்தவாறு, பாதையின் வனப்பையும், இரம்மியத்தையும் ரசித்து மகிழ்ந்தார். இதனை நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சும், நெடுஞ்சாலைகள் அதிகார சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
ஜனாதிபதியுடன் செயற்திட்ட அமைச்சர் நிர்மல கொத்;தலாவல, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். இன்றைய தினமும், இப்பாதையில் மக்களை மகிழ்வூட்டும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment