‘ஜனசெவனயைக் காட்டி பணச் சூறையாடல்
‘ஜனசெவன வீட்டுத் திட்ட’த்தைக் காட்டி மக்களை ஏமாற்றுவதன் மூலம் பணம் சம்பாதிக்கும் தொழில் நடைபெற்று வருவதாக அறியவருகின்றது. தேசிய வீடமைப்பு அதிகாரசபை மற்றும் வீடமைப்பு, கட்டுமானத்துறை, பொறியியல் சேவை மற்றும் பொது வசதிகள் அமைச்சுக்கு அத்தகைய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தாங்கள் யாருக்காவது வீடு வழங்குதானால் அது வெளிப்படையாகச் செய்யப்படும், அதுபற்றி ஊடகங்களிலும் வெளியிடப்படும் குறிப்பிட்ட மேற்படி அதிகார சபை, மேற் கண்டவாறு ஏமாற்று வேலைகள் நடந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறும் அல்லது 0112446566/0112446558 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பை எற்படுத்தி அறிவிக்குமாறும் வீடமைப்பு, கட்டுமான், பொறியியல் சேவை மற்றும் பொது வகதிகள் அமைச்சு பொது மக்களைக் கேட்டுக் கோள்கின்றது.
0 comments :
Post a Comment