ஆட்டோவும் ஹன்ரரும் நேருக்கு நேர் மோதி விபத்து!
ஆட்டோவும் ஹன்ரர் வாகனமும் கே.கே.எஸ் வீதியின் சிவலிங்கப் புளியடி சந்திக்கு அருகில் பிற்பகல் 2.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்த விபத்தில் யாழ்.ஓட்டு மடத்தைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான ஆர்.சுதாகரன் (வயது -24) என்ற இளைஞனே தலை மற்றும் காலில் காயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதே வேளை ஹன்ரரின் சாரதி தப்பி ஓடியுள்ளார்.
அந்த சமயத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பேருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இருப்பினும் ஆட்டோ பலத்த சேதங்களுக்கு உள்ளாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment