த.தே.கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்தன.
நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய மூன்று கட்சிகள் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்துள்ளன.
தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட எட்டுப்பேர் இன்று இடம்பெற்ற பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்துள்ளனர். புளட் கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட இருவர், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த ஐவர் மற்றும் ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலங்கமும் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரனும் இந்த பதவியேற்பு வைபவத்தை பறக்கணித்துள்ளார் அத்துடன் தமிழரசு கட்சி எடுக்கின்ற முடிவுகளை பார்க்கும் போது அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கின்றார்கள் என எமக்கு எண்ணத் தோன்றுகின்றது எனவும், இவர்களது முடிவுகளால் காலத்தில தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு குழப்பம் விளைவிக்கும் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment