பன்வில பிரதேச கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு !
தந்தை ஒருவரினதும் அவருடைய 2 வயதான மகள் ஒருவரினதும் சடலங்கள் கிணறு ஒன்றிலிருந்து இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன.
கண்டி, பன்வில பிரதேசத்தில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்தே மேற்படி இரு சடலங்களும் மீட்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள னர்.
சடலமாக மீட்கப்பட்ட 2 வயதான பிள்ளையின் தாய் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.இது தொடர்பான விசாரணைகளை பன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment