குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் மோசடிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை- பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
தொலைபேசி, குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் நிதி மோச டிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். சீட்டிலுப்பில் வெற்றி கிடை த்துள்ளதாகவும், அல்லது வேறு போட்டிகளில் வெற்றி கிடைத்திருப்பதாக தெரிவித்து, குறுந்தகவல், தொலைபேசி வாயிலாகவோ, மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பணமோசடியில் ஈடுபடும் குழுக்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளதாகவும் இதில் கடந்த சில வாரங்களுக்குள் மட்டும் இவ்வாறான சம்பவங்கள் பல பதிவாகி இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக ஏமாற்றுதல், மோசடி செய்தல் மற்றும் பலவந்தமாக நிதி சேகரித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment