யாழ் பல்கலை மாணவிகளிடம் போன் நம்பர் வாங்கியதை ஒத்துக்கொண்ட காமவிரிவுரையாளர்!
பல்கலைக்கழக மாணவிகளிடம் போன் நம்பர் வாங்கியது உண்மைதான் ஆனால் அவர்களின் படிப்பு தொடர்பான விடயங்களைக் கதைக்கவே வாங்கினேனே தவிர பாலியல் நோக்கத்துக்காக அல்ல என்று தன்னிலை விளக்கம் கொடுத்து வருகிறார் யாழ்.பல்கலைக்கழக பொருளியல் துறை விரிவுரையாளரான இளங்குமரன்.
பல்கலை மாணவிகளை பாலியல் ரீதியாக இம்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள இவர், தற்போது மேல்மட்ட ரீதியான செல்வாக்கை பெற்று, மீண்டும் பணியில் இணைய முயன்று வரும் நிலையில் தன்னுடைய தன்னிலை வினக்கத்தை உயர்மட்ட அதிகாரிகளிடமும் , ஊடகவியலாளர்கள் சிலரிடமும் அவர் விளக்கம் கொடுக்கிறார்.
மேலும் போன் நம்பர் வேண்டியது “ நான் கல்வியில் சற்று பின்தங்கியுள்ள மாணவிகளை முன்னேற்றுவதற்காகவே எனக்குறிப்பிட்ட அவர் இரவு படித்தார்களா? இல்லையா என்பதை போன் பண்ணி அறிந்து கொள்வேன் இப்படி நான் அக்கறை எடுப்பதால் அவர்களும் படித்து அதிக புள்ளிகள் எடுத்தார்கள் இதனால் குறைந்த புள்ளிகளை எடுத்தவர்கள் திரித்து, என்னை ஒரு காமுகன் போல சித்திரித்துவிட்டார்கள்” என்று அனைவரிடம் சென்று புலம்பி வருகிறார்.
ஆனால் இவருடைய கட்டுக்கதையை நம்ப சமூகம் தயாரில்லை ஏன் எனில் படிப்பில் பின்தங்கிய மாணவிகளை முன்னேற்றத்தான் வாங்கியவர் என்றால் ஏன் படிப்பில் பின்தங்கிய மாணர்களிடம் வாங்கவில்லை என்று கேட்கும் பல்கலை சமூகம் படிப்பில் முதன் நிலை வகிக்கும் மாணவிகளிடமும் போன் நம்பர் வாங்கியது ஏன் என கேள்வி கேட்கத்தொடங்கிவிட்டனர்.
இதே வேளை யாரும் அறிந்தீர்களே தெரியாது இவருடைய லீலைகள் புலிகள் இருந்த காலத்திலேயே இருந்ததுடன் ஒருமுறை இவரது பாலியல் அக்கிரமங்களை அறிந்த புலிகள் இளங்குமரனை ‘மண்டையில் போட’ முனைந்ததை அறிந்த அவரது மனைவி புலிகளின் காலில் விழுந்து தாலிப்பிச்சை கேட்டதாலேயே ’ விடுவிக்கப்பட்டார் என்பதுடன் இனிமேல் இப்பிடிச் செய்தால் சொல்லாமல் வெடி வைப்போம்’ என்று எச்சரிக்கையுடன் விட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று புலிகள் இல்லை இனி எம்மையாரும் கேட்க மாட்டார்கள் என்றுதான் மீண்டும் தனது காமலீலையை ஆரம்பித்துவிட்டு தற்போது கதை சொன்னால் யார்தான் நம்புவார்கள் இதே போல் மேலும் பல காமப்பிரியர்கள் விரிவுரையாளர்கள் என்ற போர்வையில் மறைந்திருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment