தூசனம் பேசும் ஆசிரியரை வெளியேற்று! அதிபரை தாக்கிய அதிகாரியை கைது செய்! ஸாஹிறா மாணவர்கள் (படங்கள்)
நேற்று இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப் பட்டதாக கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அதிகாரி கூறியபின் குறித்த கல்வியதிகாரியை விடுவித்ததாக சில ஊடகங்கள் மூலம் அறிந்த மாணவர்கள் அவரை மீண்டும் கைது செய்யும் படியும், அவருடன் சேர்ந்து பிரதி அதிபரை தாக்கிய கல்வியதிகாரியின் சகோதரரையும் கைது செய்யும் படியும், மாணவர்களுக்கு தூசனம் சொல்லி ஏசும் மற்றும் ஒரு ஆசிரியரையும் பாடசாலையை விட்டு வெளியே ற்றுமாறு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் சுலோகங்களை ஏந்திய வாரு கோசங்களை எழுப்பினர்.
பாடசாலை வளாகத்தில் ஆரம்பித்த இவ்வார்ப்பாட்டம் கல்முனை பிரதான வீதி வழியாகச் சென்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வரைச் சென்று மீண்டும் பாடசாலைக்குத் திரும்பினர்.
கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் உட்பட கல்வியதிகாரிகள் பாடசாலைக்கு விஜயம் செய்து நடந்த விடயம் தொடர்பான அறிக்கையை பெற்றுக் கொண்டு மாணவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 comments :
well done student
Post a Comment