கசினோ சட்ட மூலம் பிசுபிசுப்பு! மீளப்பெற்றது அரசு!
எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் பாராளுமன்றில் விவா திக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்த கசினோ சூதாட்ட சட்டமூலத்தை வாபஸ்பெற அரசாங்கம் தீர்மானி த்துள்ளது.
கொழும்பில் கசினோ சூதாட்ட மையங்களை அமைப்பது குறித்து பாராளுமன்றில் சட்டமூலமொன்றை முன்வைப் பதற்கு தீர்மானித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் கூட்டம் 21 ம் திகதி இரவு இடம்பெற்றது. அதன்போது கூட்டுக் கட்சிகளால் சட்டமூலங்களுக்கு பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கசினோ உள்ளிட்ட இரு சட்டமூலங்களை உபாய மார்க்க அபிவிருத்தி சட்ட மூலத்தில் திருத்தம் என்ற பெயரில் கொண்டுவர தீர்மானித்திருந்த அரசாங்கம் அதற்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்கள் காரணமாக அவற்றை மீளப் பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளது.
1988 ம் ஆண்டின் 40 ம் இலக்க இலக்கம் பந்தய மற்றும் வரிச் சட்ட மூலத்தில் கசினோ திட்டத்திற்கு வரி நிவாரணம் வழங்கவென முன்வைக்கப்பட்ட இரு சட்டமூலங்களே இவ்வாறு வாபஸாகியுள்ளன.
0 comments :
Post a Comment