Saturday, October 19, 2013

கிளிநொச்சியில் புதிதாய் தாதுகோபுரம் திறந்துவைப்பு! (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சியில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும் இராணுவ கட்டளைத் தளபதி தயாரத்னவும் நேற்று (17) புதிய பௌத்த கோயில் ஒன்றைத் திறந்து வைத்தனர். அதன் உச்சியில் பௌத்த சின்னங்களை பதித்தனர். காலையில் மாங்குளத்தில் உள்ள ஶ்ரீ சுகத விகாரையின் தாதுகோபுரமும் திரைநீக்கம் செய்யப்பட்டது.

மேற்படி நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர்கொயில் தலைவர் வண. ஹிங்குராக்கந்தை சுமன தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்டது என்றும் கிளிநொச்சியில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகம் (SFHQ-KLN) இந்த விகார கட்டுமானத்துக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்கியது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

படங்கள்: http://army.lk

No comments:

Post a Comment