கூட்டமைப்பின் தில்லுமுல்லுகளை பார்த்த முதலமைச்சருக்கு திடீர் காட்அற்றாக் ஆகி வைத்தியசாலையில் அனுமதி
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பல்வேறு குழப்ப நிலைகளுக்கு மத்தியில் சி.வி.விக்கினேஸ்வரன் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என கூட்டமைப்பு தலைவர்கள் கூறிவரும் நிலையில் குழப்பமடைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இருதய கோளாறு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் முதலமைச்சர் இன்று நண்பகல் அளவில் அனுமதிக்கப்பட்டதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இருதய சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், சி.வி. விக்னேஸ்வரன் தேகாரோக்கியத்துடன் இருப்பதாகவும் யாழ். வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 comments :
He has to face many psychological pressurers from the party which made him as the CM.They try to keep him as a person with robotic movements
இதுவரை கால குறுகிய சிந்தனையை விட்டு, தெளிவான ஒரு பரந்த சிந்தனை எல்லோருக்கும் கட்டாய தேவையாகிறது.
எனவே, தயவு செய்து எமது முதலமைச்சர் ஆக்கபூர்வமாக முடிவெடுத்து செயல்பட இடமளிக்க வேண்டும்.
ஆக்கபூர்வமான, யதார்த்த பூர்வமான நகர்வுக்கு ஆதரவளிக்காவிடினும், தயவு செய்து தடைகளை போட்டு, குழப்பாமல் பொறுமையாக இருப்பதே இன்றைய தேவை.
The CM has to chase the ones those who disturb or interfere in his administration.
Post a Comment