Saturday, October 26, 2013

மரணம் அடைந்த பிரபலங்களின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் மைக்கேல் ஜாக்சன்

மரணம் அடைந்த பிரமுகர்களில் அதிக பணம் சம்பாதித்து பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் பெயர்களை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டது அதில், மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் வகிக்கிறார்.

அவரது நிறுவனம் கடந்த ஆண்டில் ரூ.965 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது அது மட்டுமல்லாது மைக்கேல் ஜாக்சனின் ‘கிங் ஆப் ராக் அன்ட் ரோல்’ என்ற இசை ஆல்பம் அமோகமாக விற்று சாதனையும் படைத்துள்ளது.

இதே வேளை ஏற்கனவே முதலிடத்தில் இருந்த எல்விஸ் பிரெஸ்லி 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார் இவரது மகள் லிசா மேரி மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி ஆவார் அதற்கு அடுத்த படியாக கார்டூனிஸ்ட் சார்லஸ் எம் சுலோஸ் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் 5 ஆவது இடத்தில் உள்ளார் அதே சமயம் உயிருடன் வாழும் பிரமுகர்களில் பணக்காரர் பட்டியலில் கவர்ச்சி பாப் பாடகி மடோனா ரூபா 750 கோடி சம்பாதித்து முதலிடம் வகிக்கிறார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com