யாராவது நாட்டைப் பிரிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்! இராணுவத் தளபதி
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து யாராவது நாட்டைப் பிரிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயா ரட்நாயக்க கூறுகிறார். தனது வடக்கிற்கான சுற்றுலாவின் போது வவுனியாவில் வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஒரு குழு தேர்தலில் வென்று தாங்கள் தனியான நாடொன்றைப் பெற்றுள்ளோம் என்று முட்டாள் தனமான செயலில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் இராணுத்திருக்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment