த.தே.கூ வின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான ஆட்சேபனை விசாரணைக்கு, திகதியை நிர்ணயித்தது உச்சநீதிமன்றம்!
மாகாண சபை தேர்தலின்போது, த.தே.கூட்டமைப்பு சமர்ப் பித்த தேர்தல் விஞ்ஞாபனத்தை வலுவற்றதாக்க, சமர்ப்பி த்த மனு தொடர்பான ஆட்சேபனை விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
கடந்த மாகாண சபை தேர்தலின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை வலு வற்றதாக்குமாறு கோரி, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட மேலும் பல அமைப்புகள் மனு தாக்கல் செய்திருந்தன.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பிலான சட்டத்தரணிகள், இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். இவ்வாட்சேபனை தொடர்பான விசாரணை, டிசம்பர் மாதம் 10ம் திகதி இடம் பெறுமென, உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த தேர்தல் விஞ்ஞாபனம், பிரிவினை வாதத்தை போசிப்பதாக அமைந்துள்ளதென்றும், இது அரசியலமைப்பிற்கு முரணானதென்றும், மனுதாரர் சார்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.
0 comments :
Post a Comment