யுத்த காலத்தில் ஒரு கிலோ அரிசி 100 ரூபாவாகவும் ஒரு தேங்காய் 80 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், யுத்தத்தை முடித்தபின்னர் நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ளது என்று ஹோமாகமை பிட்டிப்பனையில் இலங்கையின் முதலாவது நனோ தொழினுட்ப ஆராய்ச்சி மையம் மற்றும் நனோ விஞ்ஞான பூங்காவினை திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
விஞ்ஞானிகளாக வர விரும்பும் பிள்ளைகள் குறைவு. எல்லோரும் வைத்தியர்கள், ஆசிரியர்களாக வரவே விரும்புவதாகவும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
போர் முடிவடைந்த நிலையில் பாரிய வீதிகள், விமான நிலையம், துறைமுகம் என பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், நானோ தொழிநுட்ப ஆராய்ச்சி மையம் மஹிந்த சிந்தனையின் படி வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment