புதிய பாதுகாப்பான ரயில் டிக்கட்களை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானம்!
தற்பொழுது அமுலிலுள்ள ரயில் டிக்கட் 150 வருடங்களைவிட பழைமையான பிரித்தானிய ஆட்சிக் காலத்தி ரயில் டிக்கட்டுக்குப் பதிலாக அடுத்த வருடம் முதல் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பான டிக்கட் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தற்போது அநேக நாடுகளில் நவீன டிக்கட் முறையே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்த ரயில்வே வணிக அத்தியட்சகர் சிசிர குமார, இலங்கையில் அத்தகைய நவீன முறையை பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போது அமுலிலுள்ள டிக்கட் ஊடாக மோசடி செய்யவும் டிக்கட் இன்றி பயணம் செய்யவும் முடிவதாகக் குறிப்பிட்ட அவர், பயணிகள் தன்னிச்சையாக டிக்கட் பெறக்கூடிய நவீன முறையொன்றை இலங்கையில் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment