பிழையாக பிணையில் விடுதலை செய்ததால் ஓஐசீக்கு ஆப்பு!
சட்ட விரோதமாக இரத்தினக் கல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேரைக் கைதுசெய்து, பிணையில் விடுதலை செய்வதற்குரிய சட்டத்திற்கு மாறாக நடந்துகொண்டமை தொடர்பில் கொஸ்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திலின ஹெட்டியாராச்சியின் பணி இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றின் முன் நிறுத்தாமல், பிணையில் விடுதலை செய்ததால் பணியினின்றும் நீங்கிய தொரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் கருத்திற்கொண்டு, சபரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment