இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிரிகரிப்பு!
இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த செம்டம்பர் மாதம் 26.2 வீதத்தால் அதிகரித்துள்ளது இதன்பிரகாரம் 89,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையிலும் 15.5 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 693,772 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் இருந்து வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன், தெற்காசிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் வருகை 31 வீதத்தால் உயர்வடைந்துள்ளதுடன் மாலைதீவுகளில் இருந்து வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 34.5 வீதத்தாலும் அதிகரித்துள்ளது.
0 comments :
Post a Comment