Tuesday, October 8, 2013

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணத்தில் வெற்றி பெற்ற பின்னர் அக்கூட்டமைப்பினுள் இரு பெரும் பிணக்குகள் எழுந்திருந்தது. ஒன்று ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்யக்கூடாது என்பது. அதற்கு செருப்பால் அடுத்தது போல் தீர்வு வழங்கப்பட்டது. யார் எதை சொன்னாலும் நாட்டின் ஜனாதிபதி முன்தான் பதவிப்பிரமாணம் என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவெடுக்க வல்ல சக்திகள் எடுத்தன.

இரண்டாவது பிணக்காக அமைச்சுப்பதவிகளுக்கு சத்தியாக்கிரகம் , கட்சியின் தலைமையிலிருந்து விலகுகின்றோம் என்ற மிரட்டல், அறிக்கைகள் என்ற போருக்கு மத்தியில் பின் வருவோர் வடக்கு மாகாண சபை அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

1. நீதியரசர் சி. வி. விக்கினேஸ்வசரன் – முதலமைச்சர். –.
2. பொ. ஐங்கரநேசன் – ஈபிஆர்எலஎஃப் - விவசாயம், கால்நடை, சன்னீர், மீன்பிடித்துறை.
3. பா. டெனிஸ்வரன் – டெலோ – உள்ளூராட்சி, நிர்வாகம்
4. த. குருகுலராஜா – தமிழரசுக் கட்சி – கல்வி.
5. ப. சத்தியலிங்கம் – தமிழரசுக் கட்சி – சுகாதாரம்.

அமைச்சுப் பதவி கேட்டு ஆட்டம் போட்டவர்கள் யாரையுமே இதில் காணோம்.

2 comments :

Anonymous ,  October 8, 2013 at 10:31 PM  

இலங்கை தமிழர்களை பொறுத்தளவில, ஒன்றுபட்ட நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடனான ஒரு மாநில சுய ஆட்சியை தான் விரும்புகின்றனர்.

ஆகவே தான் பிரதம நீதியரசர் விக்கினேஸ்வரனை முதல்வராக நம்பிக்கையோடு தெரிவு செய்தார்கள்.

தமிழ் கூட்டணியை காலத்தின் நிமிர்த்தம் தெரிவு செய்தார்கள் தவிர அவர்களின் பழைய மாயாஜால ஏமாற்று கொள்கைகளுக்காக அல்ல.

கௌரவ தலைமை நீதியரசர் விக்கினராஜா இல்லையாயின், நிச்சயமாக தமிழ் கூட்டணி கோமாளிகள் படு தோல்வி அடைந்திருப்பார்கள்.

இதுவரை காலமும் கஷ்டம், துன்பம், இழப்புக்களை தேடித்தந்த பேய்களிடமிருந்து விடுவித்த ராஜபக்ச அரசாங்கத்திக்கும், பிரதம நீதியரசர் அவர்களுக்கும் தமிழ் மக்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.

சிந்திக்கும் ஆற்றலுள்ளவர்கள் எல்லோரும் இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

Anonymous ,  October 8, 2013 at 10:59 PM  

எமது நாட்டு ஜனாதிபதிக்கு முன் சத்திய பிரமாணம் செய்வதை அரசியலாக்கி இலாபம் தேடும் கூட்டம் ஏன் அந்தத் தேர்தலில் பங்கு பற்றினார்கள்? அரசாங்கத்தின் தேர்தல்களை பகிஸ்கரித்து விட்டு தங்களின் வேலைகளை பார்க்க வேண்டியது தானே.

இவ்வளவு காலமாக எதிர்ப்பு அரசியலை மட்டும் நடத்தி என்னத்தை கண்டோம்?

முற்பது வருட காலம் மண்ணையும், மக்களையும் நாசமாகி, சீரழித்து, சிதைத்து,
தங்களின் வாழ்க்கையை மட்டும் வளப்படுத்த பழகிக்கொண்ட தமிழீழ கயவர் கூட்டம் இன்றும் திருந்த வில்லை.

மீண்டும் பழைய வாழ்வுக்கு எம்மை அழைக்க நினைக்கிறார்கள்.
மக்களே கள்ள நோக்குடைய கயவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com