வெலிகம தென்னிலங்கை இஸ்லாமிய செயலக பாலர் பாடசாலை மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண ரும் கலைநிகழ்ச்சிகளும் பரிசளிப்பு விழாவும் சென்ற 19 ஆம் திகதி தென்னிலங்கை இஸ்லாமிய செயலக கேட் போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வெலிகம அறபாதேசிய பாடசாலை அதிபர் திரு. செய்யித் வாரிஸ் அலி மௌலானா உட்பட பிரதம அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் உள்ளத்தை வெகுவாகக் கவர்வனவாகவும், மெய்சிலிர்க்கச் செய்வனவாகும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(கலைமகன் பைரூஸ்)
பட உதவி: பாரிஸ்
No comments:
Post a Comment