மன்மோகன் சிங் கொழும்பு வரலாம், வரலாம் !
கொழும்பில் நவம்பர் 15–17 திகதிகளில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் தான் பங்கு பற்றுவது தொடர்பில் ஆராய்வதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உயர் அரசஅதிகாரிகளைச் சந்திக்கவிருக் கின்றார்.
வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கனேஸ்வரன், தனது ஆளுங்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கு மாறாக இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்துவதும், த.தே.கூ தவிர மற்றய தமிழ் அரசியல்வாதிகள் யாவரும் மன்மோகன் சிங் இலங்கை வருவதை விரும்புவதும் குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளில் வாழும் புலிகளும் தமிழ் நாடுமே மன்மோகன் சிங் இலங்கை வரக்கூடாது என்று சொல்கின்றன.ஆனால், தமிழ்நாடு கடந்தகாலங்களில் செய்த துரோகங்களை இன்னும் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மறக்கவில்லை என்பதை இவர்கள் இன்னும் புரியவில்லையா?
1 comments :
We are pretty sure that Dr.manmohan Singh will attend the coferrence.Dipolmatic relations will be their first preferrence rather than the petty senseless protests.
Post a Comment