சஜித்துக்கு என்ன அருகதையிருக்கிறது தலைவராவதற்கு? - ரவி
பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை ஏற்பதற்கு அவருக்கு என்ன அருகதைதான் இருக்கின்றது. அவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேதாசவின் மகன் மட்டுமே.. அதனைவைத்து அவருக்கு தலைமையை ஏற்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு சஜித் பிரேமதாச பதலளித்திருக்கின்றார்.
‘ஒவ்வொருவரினதும் கருதுகோள்கள் எனக்கு அவசியமில்லை. நாட்டுமக்களின் விருப்பு எதுவோ அதற்கு நான் சாய்ப்பேன். நான் பிரேமதாசவின் மகனாக இருப்பதுதான் எனக்குரிய தகைமையா என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். ஏழைகளின் உள்ளக்குமுறல்கள் அவர்களின் வியர்வையின் மணம் என்பவற்றை என் தந்தையைப் போல எனக்கும் தெரிந்துகொள்ளக்கூடிய ஆற்றல் என்னிடம் இருக்கின்றது.
ஏன இலங்கையின் சிங்களப் பத்திரிகைகளில் ஒன்றான லங்காதீபவுக்கு கருத்துரைக்கும்போது சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment