இன்றும்கூட ஜனநாயகம் பிறக்கவில்லை... பிறப்பதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறது...! - வாசு
சிங்கள இலக்கியத்தில், கவிதையியலில், சிறுகதையியலில் அதைப்போல சிங்கள சினிமாவில் மிகவும் கவலைக்கிடமான கதைகள் உள்ளடங்கியுள்ளன என்றும், அவற்றிலிருந்து வெளிவருகின்ற அவற்றிலிருந்து தெளிவுறுத்தப்படுகின்ற உணர்வுகள் சிங்கள சமூகத்தில் நன்கு பிரபல்யம் பெற்றவை என்றும், சிங்கள சமூகத்திலிருக்கின்ற இந்த உணர்வுகளை பொதுபல சேனாவிற்கோ ராவண பலயவிற்கோ அந்த பலயவிற்கோ இந்த பலயவிற்கோ குழப்பிவிட முடியாது என்றும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.
பன்னூலாசிரியர் எம்.சீ. ரஸ்மினின் ‘ போர்க்கால சிங்கள இலக்கியங்கள்’ எனும் நூல் வெளியீட்டு விழா கொழும்பு 10 இல் அமைந்துள்ள இலங்கைத் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது, அந்நிகழ்வின் பிரதம அதிதியாக்க் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்:
நாங்கள் சிங்களத்திலும் எழுதுகிறோம். தமிழிழும் எழுதுகின்றோம். தமிழ் பேசும் மக்கள் தமிழை வாசிக்கிறார்கள். சிங்களவர்கள் சிங்களத்தை வாசிக்கிறார்கள். எங்கள் எழுத்தாளர் சங்கம் என்னைச் சந்தித்து, ‘நாங்கள் தற்போது சிங்களத்தில் எழுதுவதை தமிழிற்கும், தமிழில் எழுதுவதை சிங்களத்திற்கும் மொழி பெயர்க்க வேண்டும்’ என்று சொன்னார்கள். அதற்காக நாங்கள் நிதியம் ஒன்றை ஆரம்பித்தோம். அதற்கு எங்கள் அமைச்சு உதவுகின்றது. நாங்கள் சிங்கள, தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து வடக்கிற்குச் சென்று அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களைச் சந்திக்கச் சென்றோம். அவர்களை அங்கு சந்தித்து மிகவும் மகிழ்ச்சியாக உரையாடினோம். நானும் சகல ஒன்றுகூடல்களிலும் கலந்து கொண்டேன்.
இன்று நாங்கள் ஜனநாயக சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் தேவைப்பாட்டில் உள்ளோம். ஜனநாயக சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஒருவகை களைப்பையை இன்று நாங்கள் காண்கிறோம். இன்று இன்னும் ஜனநாயகம் பிறக்காமல் துடித்துக் கொண்டிருக்கிறது.... ஆயினும் இன்னும் பிறந்தபாடில்லை. தற்போது நாங்கள் அதற்குத் தேவையான தகுதிகளைப் பெற்றிருப்பதாக நான் நினைக்கிறேன். போரின் அழிவு தொடர்பான அனுபவம் ஒருவகையில் தகுதியாக இருக்கின்றது.
தற்போது மூளை தெளிவாகியுள்ளது. இவ்வளவு மனிதர்களை கொன்றொழித்து, இவ்வளவு உடைமைகளை அழித்தொழித்து எதனைக் கண்டோம் என்று இப்பொழுது சிந்திக்கிறார்கள். இனியாவது நாங்கள் ஜனநாயக சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவோம். இலங்கையை ஒருமைப்படுத்துவோம். இலங்கை ஒருமைப்படுத்தப்படாதவிடத்து ஒருபோதும் இலங்கை எந்த புதுமையை (ஆச்சர்யத்தையும்) நோக்கியும் நகர முடியாது. இலங்கையில் ஒருமை மலர்வது ஆச்சர்யத்துக்கான அத்திவாரமாகும். அதனால் இலங்கையை ஒருமைப்படுத்த இலங்கையின் சகல இடங்களிலிருந்தும் ஆவன செய்ய வேண்டும். இலங்கியக் கலை அவற்றில் பிரதான அங்கம் வகிக்கும் என்று உறுதியாக நான் கூறுகின்றேன்... என்றும் குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment