யாழ் கல்விச் சமூகம் கிழக்கு பாடசாலைகளுக்கு விஜயம்!
இன்று (21) திங்கள் காலை சம்மாந்துறை வலயத்திலுள்ள பல பாடசாலைக்கு அவர்கள் வருகை தந்து இப்பாட சாலைகளில் சிறப்புக்களை பார்வையிட்டு தங்களுடைய பாடசாலையிலும் அதனை செயல்முறைப்படுத்தும் நோக் குடன் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத் திற்கு வருகை தந்த யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வலய த்தைச் சேர்ந்த கோட்டக்கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர், மற்றும் அங்குள்ள பாடசாலையின் அதிபர்கள் இப்பாடசாலையின் சிறப்புக்களைப் பார்வையிட்டு, தங்களுடைய பாராட்டுகள், நன்றிகளையும் தெரிவித்தனர்.
இந்தக் குழுவினரை அதன் அதிபர் ரீ.எம். தௌபீக் மற்றும் அதன் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் அவர்கள் வரவேற்றதுடன் பாடசாலையில் காணப்படுகின்ற பல்வேறு சிறப்புக்கள் பற்றியும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனை சார்பாக முறைசாராக் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. அப்துல் றசூல் மற்றும் ஆசிரிய ஆலோசகர் ஏ. முஸ்தாக் அலியும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஊடாக முஸ்லிம் மற்றும் தமிழ் உறவுகளில் முன்னேற்றம் கண்டுள்ளதென அங்கு உரையாற்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
(ஏ.எம். தாஹா நழீம்)
0 comments :
Post a Comment