நீதிமன்றம் கைப்பற்றிய பொருட்கள் விடுவிக்கப்பட வேண்டும்! – பிரதம நீதியரசர்
நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை உரிமை யாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள் உட் பட பொருட்கள் அனைத்தையும் விடுவிக்குமாறு பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் நீதிமன்றங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நீதி மன்றத்துக்கு வெளியே அப்பொருட்கள் நீண்டகாலம் கிடப்பதனால் அவைகள் துருப்பிடித்துப் பழுதாகி விடுகின்றன என்றும் அவைகள் விடுவிக்கப்படும் போது ,அவைகள் மோசமாகப் பழுதடைந்த நிலையில் எந்தவித பணப்பெறுமதியும் அற்றவையாகி விடுகின்றன என்றும் அவர் கருதுகின்றார்.
நாம் இன்னும் போர்த்துக்கீச மற்றும் டச்சவுக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களையே கொண்டிருக்கிறோம். இந்த சட்டங்கள் யாவும் நாட்டின் தற்போதைய சமூக, பொருளாதார கருத்தூறல்களுக்கு அமையவும் புதிய தொழில் நுட்பத்துக்கு ஏற்பவும் புதுப்பிக்கப்பட வேண்டும். நடைமுறையில் இல்லாத்தும் நடைமுறைப்படுத்த முடியாதவைகளுமான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment