இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலாவும் அடுத்த மாதம் 9 நாள் பயணமாக இந்தியா வருவதுடன் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளார் இதுடன சார்லஸ் இந்தியாவுக்கு வருவது 8 ஆவது முறையாகும்.
அடுத்த மாதம் 6 அம் திகதி முதல் 14 ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வதுடன் இந்த சுற்றுப்பயணத்தின் போது சார்லஸ் தம்பதி உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூன், டெல்லி, மும்பை, புனே, கொச்சி ஆகிய ஊர்களிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன் டேராடூனில், ராஜீவ் காந்தி படித்த புகழ்பெற்ற டூன் பள்ளிக்கும் கமிலா செல்கிறார்.
தொடர்ந்து மும்பையில் பாலிவுட் பிரபலங்களுடன் விருந்தில் பங்கேற்பதுடன் கொச்சியில் உள்ள யானை வழித்தடத்துக்கும் சார்லஸ் செல்வதுடன் முதல் உலகப் போர் முடிவடைந்ததைக் குறிக்கும் ஞாபகார்த்த ஞாயிறு தினத்தையும் அவர்கள் அனுசரிக்கிறார்கள்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும்போது, முக்கிய அரசியல் தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் கலாசார பிரபலங்களையம் அவர்கள் சந்தித்துப் பேசுவதுடன் கல்வி, வர்த்தக தொடர்பு, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற துறைகளில் இந்தியா இங்கிலாந்து நட்புறவைப் பலப்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் பங்கேற்கிறார்கள் என்று லண்டனில் உள்ள சார்லஸின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு செல்கிறார் சார்லஸ் அங்கு நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்.
No comments:
Post a Comment