பவுடர் கடத்தல் மன்னன் செல்வம் அடைக்கலநாதன் தப்பிப் பிழைப்பாரா? சித்திரன்
தமிழ் மக்களின் கடும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடமாகாணசபைத் தேர்தல் இடம்பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அமோகக வெற்றி பெற்று விட்டது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு வெற்றி பெறும் அளவிற்கு நாம் ஏன் நடந்து கொண்டோம் என மக்களை சிந்திக்க வைக்குமளவுக்கு கட்சித் தலைவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 5 கட்சித் தலைவர்களும் வேறு வேறு நோக்கங்களை கொண்டு செயற்படுகின்றனர் என்பதை அவர்களது கருத்துக்களும் செயற்பாடுகளும் வெளிப்படையாகவே வெளிப்படுத்துகின்றன.
அந்த வரிசையில் ரெலோ அமைப்பின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனும் ஆகிய செல்வம் அடைக்கலநாதனின் செயற்பாடுகள் மற்றவர்களது செயற்பாடுகளில் இருந்து வேறுபட்டவை.
செல்வம் கழுவுற மீனில நாளுவுற மீன் என்பதை காலத்திற்கு காலம் புரிய வைத்து வருகிறார். புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் ஜால்ரா அடிச்சு கொண்டு இருந்த செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் தானும் கூடவே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக கூறிவிட்டு பின்னர் அவர்களுக்கு அல்வா கொடுத்து அவர்களை தனியே வெளியேறப்பன்னினார்.
அதன் பின்னர் வந்த தேர்தலிலும் மன்னார் ஆயரின் தயவுடன் தனது இருப்பை தக்க வைத்துக் கொண்ட செல்வம் அடைக்கலநாதன் பல வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கினார். மன்னாரை மையமாக கொண்டு அரசியல் மட்டும் நடத்தவில்லை. கடல் வழியாக பவுடர் கடத்தலிலும் ஈடுபடுகிறார். இந்தியாவில் இருந்து கடல் வழியாக மன்னார் கொண்டுவரப்படும் பவுடர்கள் செல்வத்தால் ஏனைய இடங்களுக்கு விநியோகிகப்படுகிறது. அது செல்வதின்ர தொழிலாச்சே அதை விடுவோம்.
ஆனால் மாகாணசபைத் தேர்தல் முடிந்த பின் செல்வம் எப்படியுள்ளார் என தெளிவாக புரிய முடியாது பலர் திக்குமுக்காடுகின்றனர். கறுவாப்பயல் செல்வம் தனது கட்சியின் மத்திய குழுவிடம் கெஞ்சி, தான் இரண்டு வருடங்களுக்கு தலைமைப் பதவியைப் பெற்றுள்ளார் என்பது முன்னர் வெளிவந்த தகவல். அதை தொடர்ச்சியாக தக்க வைத்து தொடர்ச்சியாக தலைவராக தானே இருப்பதற்கான வேலைகளையும் செல்வம் மேற்கொண்டுள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தல் முடிந்ததும் அமைச்சு நியமனங்கள் தொடர்பாக கூட்டமைப்பின் 5 கட்சித் தலைவர்களும் கலந்தாலோசித்த போது ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட், தமிழரசுக்கட்சி ஆகிய ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு அமைச்சுக் கொடுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் ரெலோவுக்கான அமைச்சுப் பதவியினை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ரெலோவின் உயர்மட்ட குழு கலந்தாலோசித்த போது ரெலோவின் அரசியல் பிரிவு தலைவரும் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினரும் ஆக விளங்கிய கே.சிவாஜிலிங்கத்திற்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதில் சிவாஜிலிங்கம் இப்பதவிக்கு லாய்க் அற்றவர் என்பது வேறு கதை.
கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இத் தீர்மானம் நிறைவேற்றபடபட்ட போது, அதனை ஏற்றுக் கொண்டவர் தான் செல்வம் அடைக்கலநாதன். அதனை செல்வம் சதாரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஏற்றுக் கொண்டமைக்கு வேறு காரணங்களும் இருந்தன.
ஒன்று ரெலோவின் மத்திய குழுவுடன் ஒன்றினைந்து சிவாஜிலிங்கத்திற்கு அமைச்சுக் கொடுப்பதால் தான் 5 வருசத்திற்கு தனது கட்சியின் மத்திய குழுவை சமாளித்து கட்சித் தலைவராக விளங்கலாம் எனக் கருதியமையாகும்.
சிவாஜிலிங்கம் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார். ரெலோ சார்பில் வென்றவர்களில் மற்றைய இரு உறுப்பினர்கள் மன்னாரில் வெற்றி பெற்றுருந்தனர். மன்னார், செல்வம் அடைக்கலநாதனின் கோட்டை. அப் பகுதியில் யாராவது தனது கட்சியில் அமைச்சுப் பதவிக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்தால் தனது செல்வாக்கு மன்னாரில் தகர்ந்துவிடும் எனக் கருதினார்.
இதனால் யாழில் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் அமைச்சராக வரவேண்டும் என செல்வம் விரும்பியிருந்தார். இந் நிலையில் மன்னார் மாவட்டத்தில் வடமாகாணசபைத் தேர்தலில் போட்யிட்ட சாள்ஸ்க்கு செல்வம் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட ஓட்டுமாட்டு தெரியவர மன்னாரில் இருந்த செல்வத்தின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் போது மன்னாரில் ஏற்பட்ட குழப்பத்தை அடக்கவும், மன்னார் ஆயரிடம் இருந்து வரும் எதிர்ப்பைத் தடுக்கவும் மன்னாருக்கு ஒரு அமைச்சுப் பதவி தருவதாக உறுயளித்ததுடன், அதற்காக மன்னார் மக்களையும் குழப்பி விட்டார்.
மன்னாருக்கு அமைச்சு வேண்டும் என மக்கள் குழம்பியதும் மன்னாருக்கு அமைச்சுப் பதவி வழங்காவிடின் கட்சித் தலைமைப் பதவியைத் துறக்கப் பேவதாக கூறி மன்னார் மக்களின் உள்ளத்தை கவர்ந்தார். இதன்பின் இரண்டு நாட்கள் கழியும் முன் தனது ஆதரவாளர்களும் கட்சி உறுப்பினர்களும் புலம்பெயர் தமிழர்களும் கட்சியின் தலைமையில் இருந்து தான் விலகுவதை விரும்பவில்லை எனக் கூறுவதாக தெரிவித்து தலைமைப் பதவியை துறப்பதாக கூறிய வாக்குறுதியை மீளப் பெற்றார். என்னையா பம்மாத்து? யார் விலக வேண்டாம் என்றது?
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியை வழங்கி தமது சித்து விளையாட்டை நடத்த தீர்மானித்த தமிழரசுக் கட்சிக்கு எங்கட கறுவா பையல் செல்வம் சலாம் போட்டதுடன் வைத்தியர் குணசீலன் அமைச்சராக நியமிக்கப்படக் கூடாது என்பதற்காக மறைமுகமாக செயற்படத் தொடங்கினார்.
வைத்தியர் குணசீலன் செல்வத்தால் வெறுக்கப்பட்டமைக்கு காரணம் செல்வத்தின்ர விடத்தல் தீவை சேர்ந்தவர் என்பதும் செல்வத்தின் உறவினர் என்பதும் ஆகும். செல்வமும் அதே ஊரைச் சேர்ந்தவர். இருவரும் உநவினர்கள். குணசீலன் அமைச்சராக வந்தால் விடத்தல் தீவு பகுதியில் செல்வத்திற்கு இருந்த மரியாதையும் வாக்கு வங்கியும் குறைந்து விடும் எனக் கருதி தனது வேலைகளை நகர்த்தினார்.
இதனால் மன்னார் சார்பாக டேனிஸ்வரனுக்கு அமைச்சுப் பதவி வழங்க தமிழரசுக் கட்சி தீர்மானித்த போது அதற்கு ஆதரவளித்தார்.
இதற்கிடையில் அமைச்சு நியமன் தொடர்பில் ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ மத்தியகுழு என்பன குழம்பிய போது தானும் குழம்புவது போன்று வேஷம் போட்டார். ஒட்டு மொத்தமாக அமைச்சுத் தெரிவில் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டதாக கூறி பதவிப்பிரமாணத்தை புறக்கணிப்பதாக தீர்மானிக்கப்பட்ட போது ஆதரவு தெரிவித்தார்.
இதன் போது மன்னார் அமைச்சரை ஏற்றுக் கொண்டு மன்னார் மக்களினதும் ஆயரினதும் தமிழரசுசுக் கட்சியினதும் செல்வாக்கை தொடர்ந்து தக்க வைப்பதா அல்லது ரெலோ மத்திய குழுவின் ஆதரவைத் தக்க வைப்பதா என்ற சிக்கல் ஏறபட்டது. இதன் போது பதவிப் பிரமாணத்தை புறக்கணிப்பதாக கூறிவிட்டு தனது கட்சி தீர்மானங்களை மீறி தனது இருப்பை தொடர்ச்சியாக மன்னாரில் தக்க வைப்பதற்காக பதவிப்பிரமாண நிகழ்வுக்குச் சென்றிருந்தார்.
இப்ப சொல்லுங்கோ கட்சித் தீர்மாத்தை மீறிய செல்வத்தை தொடர்ந்து ரெலோ தலைவராக வைத்திருக்க முடியுமா?
இப்ப மன்னார் இருப்பை தக்க வைத்ததுடன் தமிழரசுக் கட்சியிட்டயும் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்திட்டார். விக்கினேஸ்வரன் பதவிப்பிரமாண நிகழ்வில் பேசும் போது, வன்முறை நிறைந்த ஆயுத கலாசாரத்தில் இருந்து விடுபட்டு ஜனநாயத்திற்கு வந்துள்ளதாக கூறி செல்வம் அடைக்கலநாதன் அவர்களை பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதாவது தமிழ் மக்களுக்கு விளங்கக் கூடிய பாஷையில் சொல்வதானால் , தமிழ் இயக்கங்கள் விடுதலைப் போராட்டம் எனும் பெயரால் மேற்கொண்ட கற்பழிப்பு ’ கொலை ’ கொள்ளை ’ கடத்தல் ’ போதைப்பொருள் வியாபாரம் ’ கப்பம்வாங்குதல் என எல்லாவற்றிற்கும் செல்வம் தமிழரசுக் கட்சியினை ஏற்றுக்கொண்டதற்காக பிராயச்சித்தம் கிடைத்தாயிற்கு எனச் சொல்லப்பட்டுள்ளது,
இப்ப அவருக்கு கட்சிக்கில எதிர்ப்பு கிளம்பீற்று. கட்சி போனாலும் மன்னார் மக்களின் ஆதரவுடன் தமிழரசுக் கட்சியில இணையலாம் என நினைக்கிறாராம் கடத்தல்காரன். இனியும் தப்பிப் பிழைப்பாரா?
0 comments :
Post a Comment