அபராதம் கட்டும் ஹிலாரி கிளிண்டன்!
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனை வியும், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் ராஜதந்திர செயல்பாடுகளில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியதற்காக ஹிலாரி கிளிண்டனைப் பாராட்டி லண்டனில் செயல்பட்டு வந்த சத்தாம் ஹவுஸ்(ஒரு அரசு சாராத, லாப நோக்கில்லாமல் இயங்கும் நிறுவனம்) விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
மத்திய லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் சதுக்கத்திற்கு அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு தனது பரிவாரங்களுடன் வந்த ஹிலாரி கிளிண்டன் தன்னுடைய மெர்சிடிஸ் காரை அங்கு நிறுத்திவிட்டு விழா நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிட்டார்.
அந்தப்பகுதியில் காரை நிறுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு 3.30 பவுண்டு கட்டணம் செலுத்தவேண்டும் ஆனால், அவருடன் வந்த யாரும் இந்தக் கட்டணத்தைச் செலுத்தாமல் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து காரில் ஏறும்போது அங்கு காவலில் இருந்த போக்குவரத்துக் காவலர் 80 பவுண்டு அபராதம் செலுத்துமாறு கூறியதுடன் ஹிலாரியின் கார் அங்கு 45 நிமிடங்கள் நின்றிருந்ததாக வெஸ்ட்மினிஸ்டர் நகரசபையின் உறுப்பினரான டேனியல் அஸ்டைர் கூறினார்.
மேலும் உலக அளவில் பிரபலமானவராக இருப்பினும் அனைவருக்கும் விதிமுறைகள் பொதுவானவையே என்று அவர் தெரிவித்ததுடன் இந்த அபராதத் தொகையை 14 நாட்களுக்குள் கட்டினால் இந்தத் தொகை பாதியாக அதாவது 40 பவுண்டாகக் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தலைநகரின் நெரிசல் மிகுந்த மையப்பகுதியில் தினசரி பத்து பவுண்டு கட்டணம் செலுத்துவதற்கே அமெரிக்க உயர் அதிகாரிகள் மறுக்கின்றனர் என்று தெரிவித்தார் லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன்.
எனவே, ஹிலாரி கிளிண்டன் மறுப்பேதும் சொல்லாமல் இந்த அபராதத்தைக் கட்டுவாரா என்பது இருந்து கவனிக்க வேண்டிய விஷயம்.
0 comments :
Post a Comment