முன்னர் புலிகள் வடக்கில் துப்பாக்கியல் சுட்டார்கள்... தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தெற்கில் துப்பாக்கியைப் பயன்படுத்தி ஆட்களை சுடுகிறார்கள். 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 30 வருடங்கள் வடக்கு கிழக்கில் ஒலித்த வெடிச் சத்தத்தையும் நிலக் கண்ணிவெடிகளின் சத்தத்தையும் முழுமையாகவே அழித்தொழித்தார் என்றாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூலமாக அந்த வெடிச் சத்தங்கள் மீண்டும் தெற்கில் கேட்கக் கிடைப்பது மிகவும் கவலைக்கிடமானதாகும் என தென் மாகாண முதலமைச்சர் ஷாண் விஜலால் த சில்வா குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட குழுக்கள் ஒன்றுக்கொன்று மோதியமை - இவ்வாறானதொரு விடயம் நடந்திருக்கின்றமை ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல் என்றே கூறத் தோன்றுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் இதற்கு முன் தலைமைக்காக கைகலப்புக்கள் நடந்தாக - அதற்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தாக வரலாற்றில் ஒருபோதும் கேட்கப்படவில்லை. கட்சியைச் சேர்ந்த இரு குழுக்களும் தங்களுக்குள் நடாத்திய கைகலப்பானது அவர்களின் ஒழுக்கமற்ற - கீழ்த்தரமான அரசியலையே மக்களுக்குத் தெளிவுறுத்துகின்றது என்றும் தென் மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
No comments:
Post a Comment