வேலியே பயிரை மேய்கிறதாம்..! பொலிஸ் அலுவலர்கள் பொலிஸ் வலையில்!!
களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் அலுவலர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நால்வரில் ஒருவர் உதவிப் பொலிஸ் பரிசோதகர், மற்ற மூவரும் கான்ஸ்டபிள்மார்களாவர்.
மதுபான விற்பனையாளர்களிடம் பணம் பெற்றுக் கொள்ளல் சம்பந்தமான குற்றச் சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மதுபான விற்பனை சுற்றிவளைப்பு சம்பந்தமாக சட்டத்தை சாதகமாகப் பயன்படுத்துவதற்காக அவர்கள் இவ்வாறு பணம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சந்தேக நபர்களான பொலிஸ் அலுவலர்கள் களுத்துறை நீதவான் முன்னிலையில் நிறுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment