ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம் பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு அனைத்து மாகாண முதலமைச்சர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் ஒவ்வொரு மாத இறுதி அமைச்சரவைக் கூட்டத்திலும் மாகாண முதலமைச்சர்கள் கலந்து கொண்ட போதும் அண்மைய காலங்களில் அது நடைபெறவில்லை எனினும் மீண்டும் இன்று தொடக்கம் அமைச்சரவை கூட்டங்களுக்கு முதலமைச் சர்கள் அழைக்கப்பட்டுவர் என கூறப்படுகிறது.
இதனடிப்படையில் முதற்தடவையாக மாகாண முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்கமாட்டார் என தெரியவருவதுடன், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள விருந்த நிலையிலேயே வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று நண்பகல் இருதய சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாலாயே அமைச்சரவைக் கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார் என தெரியவந் துள்ளது.
No comments:
Post a Comment