யாழ். விக்டோரியா வீதியில் உள்ள வீட்டு மலசலகூட குழியிலிருந்து குண்டுகள் மீட்பு!
யாழ். விக்டோரியா வீதியிலுள்ள அழகுபடுத்தும் பயிற்சி நிலையமொன்றின் மலசலகூட குழியிலிருந்து 6 மோட்டார் குண்டுகளும், ஒரு ஆர்.பி.ஜி ரக குண்டு ஒன்றும் இன்று மீட்கப்பட்டுள்ளன. அழகுபடுத்தும் நிலையத்தில் இருந்த பழைய மலசலகூடக் குழியினை தூர்வாறும் போதே இந்தக் குண்டுகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வீட்டு உரிமையாளரால் அருகில் உள்ள இராணுவத்தின ருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினர் குண்டுகளை மீட்டுச் சென்றனர்.
நாட்டில் நீண்டகாலம் நடைபெற்ற யுத்தம் காரணமாக மக்களிடம் கையளிக் கப்படாது இருந்த இந்தப்பிரதேசம் 2011ஆம் ஆண்டுதான் மக்களிடம் கையளிக்கப் பட்டிருந்தற்மை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment