தமிழும் விக்கிரமபாகுவும்.
தமிழ்த் தீர்க்கதரிசிகளால் சிங்கள மெய்யியலும் (தத்துவம்) பௌத்த மதமும் பாதுகாக்கப்பட்டன. மேலும், தங்களது கலாச்சாரத்தின் ஊடாக பௌத்த மதத்துக்கும் சிங்கள நாகரீகத்துக்கும் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளனர் என்று நவ சமசமாஜக் கட்சியின் தலைவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன ஓர் ஊடக மாநாட்டில் கூறியுள்ளார்.
வரலாற்றை முழுதாகப் படித்தால், தமிழ் தீர்க்கதரிசிகளின் பெரு முயற்சியால் சிங்கள நாகரீகமும் பௌத்தமும் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறதென்று அறிந்து கொள்ளலாம். நமது ‘கலை’, ‘இசை’, ‘அழகியல்கள்’ ஏன்’ நமது மேடை அபிவிருத்திகள் கூட தமிழ்ப் பண்பாட்டின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டன. இந்த துறைகள் யாவற்றினதும் ஆரம்பத்தை தமிழ் செல்வாக்கிலிருந்தே நாம் பெற்றுக்கொண்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment