மதுராகொட கிராம சேவகர் காரியாலயத்தில் மரக்கன்றுகள் வழங்கல்...!
வெலிகம மதுராகொட கிராம சேவகர் காரியாலயத்தில் இன்று (11) திவிநெகும திட்டத்தின் கீழ் மரக் கன்றுகள் பகிர்ந்தளித்தல் நிகழ்வு இடம்பெற்றது.
வீட்டுப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் இம்மரங்கள் வழங்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் கிராம சேவகர் பிரிவுகளில் இடம்பெறுகின்றன.
இந்நிகழ்வில் மதுராகொட கிராம சேவகர், மதுராகொட சமுர்த்தி உத்தியோகத்தர், மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment