8 வருடங்களாக தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த சடலம்!
பிரான்சில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபரொருவரின் உடல், எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் பாரீசில் உள்ள பிசி செயிண்ட் ஜார்ஜ் குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் நிகின் (வயது 52).
இவர் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதுடன், வேலை பார்த்த அலுவலகத்திலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தனது இரண்டு அண்ணன்கள் மற்றும் இரண்டு சகோதரிகளுடனான தொடர்பினை முறித்துக்கொண்டார்.
அதன் பின் சில வருடங்களாக யாருடைய தொடர்பும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்த இவர் 2005 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் இவர் இறந்துவிட்டார் என்ற செய்தி யாருக்கும் தெரியவில்லை, மேலும் இவர் வசித்த வீடு அருகில் உள்ள வீடுகளோடு தொடர்பில்லாமல் தனித்து இருந்துள்ளது.
கடன் காரணமாக அவரது வீடும் வேறு ஒருவருக்கு விற்கபட்டது.
இந்நிலையில் தற்போது அந்த வீட்டிற்கு குடிவந்த நபர் வீட்டினுள் சென்று பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்துள்ளார். நிகினின் உடலானது காய்ந்து போன நிலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment