மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த பிரதேச சபை உறுப்பினருக்கு 7 வருட சிறை!
15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பேருவளை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரத்னசிரி களுபெரும என்பவருக்கு, களுத்துறை நீதிமன்றி னால் கடும் வேலையுடன் கூடிய 07 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ரூபா 6 இலட்சம் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும், குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூன்று குற்றச்சாட்டுக்களுக்காக ரூபா 7,500 தண்டப் பணமும் வழங்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டுள்ள நீதிமன்றம், அவ்வாறு பணத்தைச் செலுத்தாத விடத்து அதற்காக 6 வருட சிறைத் தண்டனை வழங்குவதற்கும் கட்டளையிட்டிருக்கின்றது.
2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி மதுகம பிரதேசத்தில் ஏற்பட்ட இந்தச் செயலுடன் தொடர்புடைய 3 குற்றச்சாட்டுக்களை பொலிஸ் மா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment