ஈராக் நாட்டில் ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியப் புனிதத் தலங்கள் உள்ளன இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனைக்கு வந்து செல்வார்கள் ஆனால், இவர்கள் அடிக்கடி அல்கொய்தாவினர் உட்பட சன்னி தீவிரவாதிகளால் தாக்கப்படுகின்றனர்.
சமீபத்தில் ஷியா பிரிவின் ஒன்பதாவது மத குருவான முகமது அல் ஜவாதின் மறைவு தினத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பக்தர்களைத் தாக்கியதில் குறைந்தது 49 பேர் பலியாகி உள்ளதாகவும் 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது வடக்கு பாக்தாத்தில் உள்ள அதமியா பகுதியில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்த மற்ற விபரங்கள் தெளிவாக தெரியவில்லை.
கடந்த 2006-2007 ஆம் ஆண்டுகளில் சன்னி, ஷியா பிரிவினரிடையே ஏற்பட்ட ரத்தம் சிந்திய கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் அதன்பின்னர் ஈராக்கில் தற்போது மீண்டும் வன்முறைக் கலவரங்கள் பெரிதாகத் தோன்ற ஆரம்பித்துள்ளன நேற்று சனிக்கிழமை அன்று மோசுல் நகரில் இரண்டு ஈராக்கிய பத்திரிகையாளர்கள் போராளிகளால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அரசு பாதுகாப்புப் படையினர் மற்றும் அதிகாரிகள் குறித்த அறிக்கைகள் வெளியீடு அரசை எதிர்க்கும் தீவிரவாதிகளால் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது என்று ஷர்க்கியா பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய வன்முறை நிகழ்ச்சிகள் ஈராக்கில் ஊடக சுதந்திரத்தின் மீதான குறைபாடுகளை மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாக்குவதாகவே தோன்றுகின்றது அதுமட்டுமல்லாது பாதுகாப்பு மற்றும் மருத்துவத்துறை தகவல்களின்படி இந்தத் தாக்குதல்களுடன் சேர்த்து இந்த நகரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக இருக்கின்றது மேலும், ஈராக்கில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 4800 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment