64 பேர் உயிரிழப்பதற்கு காரணமான முன்னள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினருக்கு 5 வருட சிறை!
2006ம் ஆண்டு ஜூன் மாதம் கெப்பத்திகொல்லாவ யக்க வௌ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து பஸ் மீது எல்.ரி.ரி.ஈ யினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலிற்கு உதவி புரிந்த எல்.ரி.ரி.ஈ இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு அநுராதபுரம் விசேட மேல் நீதி மன்றம் 5 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித் துள்ளது.
குறித்த பஸ் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்த மரம் ஒன்றின் மீது ஏறி எல்.ரி.ரி.ஈ யினருக்கு சமிக்ஞை வழங்கியதாக சந்தேகநபர் குறித்த நபர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது இதற்கிணங்க குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து குறித்த நபருக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது
குறித்த கிளைமோர் தாக்கு தலில் 64 பேர் உயிரிழந்துடன் மேலும் பலர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment