வவுனியாவில் டிப்பர் மோதியதில் 6 வயது சிறுமி பலி!
வவுனியா ஏ9 வீதியில் இன்று மதியம் 2.00 மணியளவில் நடைபெற்ற வீதி விபத்தில் கணேசன் நிறோசினி என்ற ஆறு வயது சிறுமி தலை சிதறி உயிரிழந்துள்ளார்.
இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது புளியங்குளம் பரிசங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி ஏ9 வீதியோரமாய் தனது வீடு நோக்கி சகோதரனுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது வவுனியாவிலிருந்து வந்த டிப்பர் வாகனம் சிறுமியை மோதியதில் சிறுமி தூக்கி எறியப்பட்டு துடிதுடித்து தலை சிதறி பலியாகியுள்ளார்.
சம்பவம் அறிந்து இடத்திற்கு உடனடியாக வருகைதந்த பொலிசார் குறித்த வாகனச்சாரதியை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அனுப்பிவைக்க முயற்சி செய்ததாகவும் இதை அறிந்து அங்கு கூடிய பொது மக்கள் வாகனத்தை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாகனத்தை எடுக்கவிடாமல் வீதியின் குறுக்கே நின்று ஆர்ப்பாட்டம் செய்தபோதும் இதனை ஒருதுளியும் கவனத்திலெடுக்காத பொலிசார் வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் வவுனியா வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
1 comments :
Very very bad by tipper driver ans police. Thay should have a respect for child and driver must be arrested and put him into the jail immidiatly!
This is very bad for Police and thay have to give a respect for there duty!
When police do there job correct,will all those speedy tipper drivers take care and stopp there alcohol drinks.
Spesially A9 Road is most dangerous and there are no respect for people by tipper drivers, buss drivers etc.
Thay will only fly!!! thay thik that thay are king on the road! Buss drivers too!!
Bastrers!
Post a Comment