ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்போம்! இன்னும் 4 ஆண்டுகளில் ஆட்சி அமைப்போம்!!
தனது தலைமைத்துவத்துடன் கூடிய ஜனநாயக்க் கட்சி, இன்னும் 4 ஆண்டுகள் செல்வதற்கு முன்னர் இந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் என சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக்க் கட்சியின் அங்கத்துவர்களுக்காக தொகுதி அமைப்பாளர் பதிவி வழங்கும் நிகழ்வு, கோட்டை வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தின் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நடைபெறவுள்ள தென் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடித்து அதிகூடிய வாக்கு விகிதாசாரத்தைப் பெற்றுக் கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும்போது, கடுநாயக்க – கொழும்பு அதிவேக பாதையை 1/10 அளவில் நிர்மாணித்திருக்க முடியுமாக இருக்க, அதிகூடிய பணத்தைச் செலவுசெய்து அதனை நிர்மாணித்திருக்கிறார்கள். இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால், செலவு போக அடுத்தவையெல்லாம் ராஜபக்ஷ குடும்பத்தால் கமிஷனாக சூறையாடப்பட்டுள்ளது.
புதிய அதிவேகப் பாதையில் ஒரு கிலோமீற்றருக்கு 14 மில்லியன் டொலர்கள் செலவுசெய்யப்பட்டுள்ளது என்ற பொய்யை அரசாங்கம் சோடித்துச் செல்கிறது. இராணுவத் தளபதியாக இருக்கும் போது தான் பிறநாடுகளுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள நான், ஒரு மில்லியன் டொலரில் செய்ய முடியுமானவை எவை எனக் கேள்வி எழுப்ப ஆயத்தமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment