அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 40 இலங்கையர் நாடு திரும்பினர்!
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்று, அங்கு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 12 பெண்கள், 08 சிறார்கள் உட்பட 40 பேர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் கடந்த மாதம் 7 ஆம் திகதி படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றவர்கள் என பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment