பாகிஸ்தான் கடற்படை அட்டூழியம்; இந்திய மீனவர் சுட்டுக்கொலை, 30 பேர் கடத்தல்!
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை ஒட்டியுள்ள ஜகாவ் சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் 5 படகுகளுடன் 30 மீனவர்களையும் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடுக்கடலில் இந்திய மீனவர்களின் படகுகளை வழிமறித்து பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் கண்மூடித்தனமாக இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுவதுடன் துப்பாக்கிச்சூட்ல் நரன் சோசா என்ற மீனவர் உயிரிழந்துள்ளார் எனவும் தப்பி வந்த ஒரு மீனவர் போர்பந்தர் மீனவர் சங்கத்திலும், பொலிஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனியிடம் பேசிய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, மத்திய அரசு விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment