கவிஞர் பொத்துவில் அஸ்மினின் 'பாம்புகள் குளிக்கும் நதி' இம்மாதம் 27 இல்...!
பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய ´பாம்புகள் குளிக்கும் நதி´ கவிதை நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 27ம் திகதி மாலை 3.40 க்கு இலங்கை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளார்.
கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹஸன் அலி, பைசல் காசீம், பிரபா கணேசன், ஹூனைஸ் பாருக், எம்.எஸ்.எம் அஸ்லம் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
நூல் அறிமுகத்தை தமிழ் தென்றல் அலி அக்பரும், கவி வாழ்த்தினை கவிஞர் கிண்ணியா அமீரலியும், நூலாய்வினை பேராசிரியர் கலாநிதி துரைமனோகரனும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நூல் பற்றிய கருத்துரைகளை மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், எழுத்தாளர் உடுவை தில்லை நடராஜா, கவிஞர் முத்துமீரான், சோலைக்கிளி ஆகியோர் வழங்கவுள்ளனர்.
0 comments :
Post a Comment