கருவில் இருக்கும் 25 வார கருக்குழந்தைக்கு அறுவைச் சிகிச்சையா? வீடியோ இணைப்பு!
அமெரிக்காவில் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளர்ந்த 25 வார கருக்குழந்தைக்கு இருதயத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது தெரிந்தது.
இதனால் அக்குழந்தைக்கு பிறந்த பிறகு மூச்சுதிணறல் உள் ளிட்ட இருதய நோயினால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உருவாவதோடு, குழந்தை யின் உயிருக்கே ஆபத்தாக முடியும் நிலை ஏற்பட்டும் என்பதால், தாயின் வயிற்றுக்குள் கருப்பையில் வளரும் போதே குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்பதால் மயிரிழை அடர்த்தி உள்ள சிறிய வயர் , 7 செ.மீ அளவிலான மெல்லிய ஊசி போன்றவற்றின் மூலம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது
0 comments :
Post a Comment