மேமன் கவியின் ‘மொழி வேலி கடந்து..’ நூல் வெளியீடு 20 ஆம் திகதி!
மேமன் சமூகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளும், கவிஞருமான மேமன் கவியின் ‘மொழி வேலி கடந்து’ நவீன சிங்கள இலக்கியங்கள் ஒரு பார்வை எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை 4 மணிக்கு கொழும்பு 12 பிரைட்டன் ரெஸ்ட்டில் நடைபெறவுள்ளது.
தேசபந்து சுமனசிரி கொடகே, நந்தா சுமனசிரி கொடகே, டொமினிக் ஜீவா ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ள இவ்விழாவில்,
பிரபல தமிழ், ஆங்கில பத்தியெழுத்தாளும், திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன், ருஹூனுப் பல்லைக் கழக விரிவரையாளர் தம்மிக்க ஜயசிங்க, மொழிபெயர்ப்பாளர் ஹேமச்சந்திர பதிரன ஆகியோர் நூலறிமுகம் செய்யவுள்ளனர்.
நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் அவர்களும், சிறப்புப் பிரதிகளை துரைவி ராஜ். பிரகாஷ், ஆரிப் அஸீஸ், எஸ். பரமசிவம், முஹமட் இக்பால் ஆகியோர் பெற்றுக் கொள்வர்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment