அடுத்தாண்டு தேர்தல் நடைபெற்றால் 2013 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல்படியே இடம்பெறும்: மகிந்த
அடுத்தாண்டு தேர்தல் ஒன்று நடைபெறுவதாகவிருந்தால் 2013 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பிலுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலே பயன்படுத்தப்படும். வாக்காளர் இடாப் புக்களில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப் படவிருந்தால் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை சமர்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே தேர்தல்கள் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்களை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. வாக்காளர் இடாப்பின் பெயர்ப்பட்டியல் தொடர்பான உரிமைகளை கோருவது ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான காலவகாசம் எதிர்வரும் 30 ஆம் திகதி பூர்த்தியடையும், சகல கோரிக்கைகளும் ஆட்சேபனைகளும் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு வழங்க முடியும்.
இது தொடர்பாக ஆராய்ந்ததன் பின்னர் இது குறித்த உறுதிப்படுத்தும் பணிகள் டிசம்பர் மதாம் 31 ஆம் திகதி மேற்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment